கொழும்பு – மட்டக்களப்பு ரயிலில் நேற்றிரவு(10) கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தந்தை மற்றும் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தந்தை கொஸ்லந்தவிலும் தாய் பண்டாரவளையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிறந்து 10 நாட்களே ஆன சிசு ரயிலின் கழிவறையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.