வெல்லாவெளி பீலியாறு மக்களின் கோரிக்கைக்கு தீர்வு - கோ.கருணாகரம் எம்.பிமட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று வெல்லாவெளி பீலியாறு கிராமத்தில் நீண்ட நாளாக மின்சாரத்துடன் கவனிப்பாரின்றி நிலத்தில் கிடந்த மின்சார வயர்களை வெல்லாவெளி பீலியாறு மக்களின் கோரிக்கைக்கு அமைவாக சீர் திருத்தம் செய்யப்பட்டனர்.


நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட மின்சாரசபை பொறியியளாளர் வரதன் அவர்களின் துரித நடவடிக்கையின் கீழ் நேற்று (05-03-2023) களுவாஞ்சிகுடி மின்சார சபையினால் உடைந்து நிலத்தில் நீண்ட நாளாக கிடந்த மின்சார வயர்களை சீர் திருத்தம் செய்யப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வெல்லாவெளி பீலியாறு மக்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றனர்.

புதியது பழையவை