மட்டக்களப்பில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்பு!இலங்கையில் தொழிற்சங்கள் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வரவின்மையால் வெறிச்சோடிக்காணப்பட்டன.

ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் வருகைதந்து திரும்பிச்சென்றதை காணமுடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

வரி அதிகரிப்பு,மின்சார கட்டணம் அதிகரிப்பு,வாழ்க்கை செலவு அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துச்சேவைகள் வழமைபோன்று நடைபெற்றுவருவதுடன் மக்கள் தமது அன்றாட கடமைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

புதியது பழையவை