இலங்கையில் வெயிலில் பரீட்சை எழுத்திய மாணவிகள் அதிர்ச்சி சம்பவம்!



கிளிநொச்சியில் உள்ள புனித திரேசா பெண்கள் கல்லூரியில் தரம் 11 மாணவிகளை மூன்றாம் தவணை பரீட்சைக்காக வகுப்பறை கட்டடங்களுக்கு வெளியே பரீட்சை எழுத்தவிட்டமை சமூக ஊடகங்களில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொய்கா மண்டபம் இருந்தும் அதிபர் அதற்குள் பரீட்சையை நடாத்த அனுமதிக்காததன் காரணமாக வெளியில் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாட்டை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மாணவிகள் ஒருவருக்கொருவர் பார்த்து எழுதுவதனை தவிர்ப்பதற்கும் இலகுவாக கண்காணிப்பதற்கும் இந்த ஏற்பாட்டை அவர்கள் மேற்கொண்டுள்ளனர் என பாடசாலையின் சில ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த சம்பவம் தனக்கு தெரியாது என்றும் தான் கொய்கா திட்ட மதிப்பீடு வேலைகளில் பிசியாக இருந்ததன் காரணமாக மாணவிகளை வெளியில் பரீட்சை எழுத ஏற்பாடு செய்யப்பட்டமை தெரியவில்லை என்றும் தன்னை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சில ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்றும் அவர்களே புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் விட்டுள்ளனர் என அதிபர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் அதிபருடன் தொடர்பு கொண்ட போது அவர்களுக்கு பதிலளித்த அதிபர் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என உறுதியளித்துள்ளார்.
புதியது பழையவை