மட்டக்களப்பு வாகரை பிரதேச சபைக்குட்பட்ட வெருகல் படுகொலை சிவப்பு சித்திரையின் 19வது ஆண்டு நினைவு தினம்,
கதிரவெளியில் உள்ள வெருகல் மலை மக்கள் பூங்காவில் அனுஷடிக்கப்பட்டது.
2004ம் ஆண்டு சித்திரை மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற வெருகல் படுகொலையில், கட்சியின் உறுப்பினர்களை
நினைவு கூரும் முகமாகவே நினைவு தினம் அனுஷடிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி
வேண்டி விசேட பூசை இடம்பெற்றதுடன், மலர் தூபி, அஞ்சலியுடன், ஈகைச் சுடரும் ஏற்றப்பட்டது.
நினைவு தின நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ,கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான திரவியம் ,பிரசாந்தன் மற்றும்
கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.