மட்டக்களப்பு மட்டிக்களி அருள்மிகு ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய தீ மிதிப்பு!கிழக்கிலங்கையின் மிகப்பழமையானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான மட்டக்களப்பு மட்டிக்களி அருள்மிகு ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் நேற்று மாலை ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

கிழக்கிலங்கையில் தனித்துவமானதும் தமிழர்களின் பாரம்பரிய உற்சவ முறைகளைக்கொண்டதுமான மட்டிக்களி அருள்மிகு ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயத்தின் பங்குனி உத்தர திருச்சடங்கானது கடந்த 31ஆம் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

உற்சவத்தில் கலியாணக்கால் வெட்டும் உற்சவம், வனவாச உற்சவம், தவநிலை நிகழ்வு என்பன நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதி உற்சவமான தீமிதிப்பு உற்சவம் நடைபெற்றது.

ஆலய பிரதம பூசகர் த.தயாபரன் தலைமையில் நடைபெற்ற உற்சவத்தில் நேற்று (07)மாலை மட்டக்களப்பு வாவியில் மஞ்சல் குளிக்கும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து ஆலய முன்றிலில் தீ மிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை