மாற்றான் மனைவியுடன் தகாத உறவு - ஒருவர் அடித்துக் கொலை!கஹவத்த – எந்தான – மதலகம கொலனி பகுதியில் நபரொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருக்கும், சந்தேகநபரின் மனைவிக்கும் இடையிலான திருமணத்திற்குப் புறம்பான உறவினால் ஏற்பட்ட பிரச்சினையே இந்த கொலைக்கான காரணமென பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், அதில் பலத்த காயமடைந்த குறித்த நபர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

சந்தேகநபர் எந்தான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நேற்று பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை