பிள்ளையானின் வாகன தொடரணியில் ஏற்பட்ட விபத்தில் - குடும்பஸ்தர் படுகாயம்!தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளக வீதியில் வைத்து இந்த விபத்து சம்பவம் நேற்று (15.04.2024) பதிவாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன்போது விபத்து சம்பவத்தில் பிள்ளையானின் வாகனத்தொடரணியில் பங்கேற்ற கெப் ரக வாகனமும் மறுமுனையில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் விபத்துக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை