மட்டக்களப்பு பழுகாமம் சமுர்த்தி வங்கியின் சித்திரைப் புத்தாண்டு விழாமட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசெயலக பழுகாமம் சமுர்த்தி வங்கியினால் நேற்று (22-04-2023)பிற்பகல் கிராமிய சித்திரைப்புத்தாண்டு விழா சிறப்பாக நடாத்தப்பட்டது.


தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டினை சிறப்பிக்கும் முகமாக. திருப்பழுகாமம் வன்னி நகர் பசுந்தளிர் பாலர் பாடசாலையில் கிராமிய சித்திரை புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழாவானது நடைபெற்றது.


நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவு கணக்காய்வாளர் திருமதி.ஜெயவானி கனகலிங்கம், பழுகாமம் சமூர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.ரஜேந்தினி சசிகரன், போரதீவுப்பற்று பிரதேசசெயலக கணக்காளர் திரு.தில்லைநாதன் அம்பிகாவதி, சமூர்த்தி தலைமைய முகாமையாளர் ஆ.தனேந்திரராசா, சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் அ.குககூமார், போரதீவுப்பற்று பிரதேச கலாச்சார உத்தியோகஸ்தர் ஆ.பிரபாகரன், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் விளையாட்டு இளைஞர் யுவதிகள் சிறுவர்கள் பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பல்வேறு கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.புதியது பழையவை