இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
புதியது பழையவை