துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட இராணுவ வீரர்!



கிளிநொச்சியில் வேலைதளத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர், தனது கைத்துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்றைய தினம் (18-04-2023) அதிகாலை கிளிநொச்சி 651 காலாட்படை படைப்பிரிவில் இடம்பெற்றுள்ளது என்று இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் காலி பிரதேசத்தை சேர்ந்த இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.

மேலும், குடும்ப பிரச்சினை காரணமாக, அவர் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்துக்கான காரணம் இது வரையில் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
புதியது பழையவை