மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டல்!மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களாக செயற்படும் முதன்மை மாணவர்கள் உட்பட 40 மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்றைய(26-05-2023) தினம் வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் திரு .மா. சத்தியநாயகம் தலைமையில் ஆசிரியர்கள் மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.

இவ் மாணவ தலைவர்களுக்கு அணிவிப்பதற்கான சின்னங்களை முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய பழைய மாணவியும் பிரபல சட்டத்தரணியுமான திருமதி மங்களேஸ்வரி சங்கர் அவர்கள் வழங்கியதோடு இவ் நிகழ்வினை ஒருங்கிணைத்து செயற்படுத்திய ஆசிரியர் திரு. மு. நமசிவாயம் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
புதியது பழையவை