கிழக்கு மாகாணத்தில் விசேட டெங்கு வாரம் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில்,
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், போரதீவுப்பற்று பிரதேசசபை, பிரதேசசெயலகம், மற்றும் பொதுமக்களும் இணைந்து சிரமதான பணிகளையும் வீடுகளில் டெங்கு பரிசோதனைகளையும் முன்னெடுக்கப்பட்டன.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு
பெரியபோரதீவு, பட்டாபுரம், முனைத்தீவு ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று
சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக காணப்படும் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சிலருக்கு சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
நிகழ்வில் வெல்லாவெளி பொதுச்சுகாதார பரிசோதகர் கு.குபேரன், பொதுச்சுகாதார வெளிக்கள உத்தியோகஸ்தர்கள்,பிரதேசசபை செயலாளர் வி.கௌரிபாலன், பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள், சுகாதார வைத்திய அலுவலக ஊழியர்கள், கிராம உத்தியோகஸ்தர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.