இலங்கையின் பிரபல மூத்த நடிகரான ஞானங்க குணவர்தன காலமானார்!இலங்கையில் பிரபல மூத்த நடிகரான ஞானங்க குணவர்தன (Gnananga Gumawardena) உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (04-05-2023) மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.


அவரின் பூதவுடல் இன்று (05-04-2023) காலை 8.30 மணி முதல் நாளை மறுதினம் (06-05-2023) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை பொரளை தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பொரளை மயானத்தில் இறுதி கிரியைகள் நடைபெறும்.

1000ற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களிலும், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் ஞானங்க குணவர்தன நடித்துள்ளார்.


தொலைக்காட்சி நாடகங்களில் நடித்ததன் அவர் மூலம் பெரும் புகழைப் பெற்றார்.

இந்த நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.இலங்கையில் பிரபல மூத்த நடிகரான ஞானங்க குணவர்தன
புதியது பழையவை