உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள மாநகரசபை ,நகர சபை ,பிரதேசசபை ஆகியவற்றில் நீண்ட நாட்களாக நாட் சம்பளம் அடிப்படையில் தற்காலிகமாக பத்து நாட்கள், 15 நாட்கள் போன்ற அடிப்படையில் வேலை செய்யும் தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்கப்படாமையினால் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற விலைவாசிகள் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக அவர்களுடைய குடும்ப சுமை காரணமாக மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்
நாட்டின் அரசாங்கம் கௌரவ ஜனாதிபதி அவர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக 10 வருடத்துக்கு மேலாக வேலை செய்யும் ஊழியர்களை நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் M.S.Thowfeek அவர்கள் (12-05-2023) திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.