க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று (27)மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள பரீட்சை நிலையங்களில், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில்,
மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் டெங்கு பரிசோதனையில்
ஈடுபட்டனர்.
பாடசாலைகளின் சுற்றுப்புறங்கள், மலசல கூடங்கள், வகுப்பறைகள்,மழை நீர் தேங்கி நிற்கும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றை சீர்செய்யுமாறு பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.