180 நாட்களை பூர்த்தி செய்த ஊழியர்களை நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்கும் வேலை திட்டம்!


அரசாங்க நிறுவனங்களில் பல்வேறு தரத்தில் தற்காலிக அடிப்படையில் சேவையாற்றி 180 நாட்களை பூர்த்தி செய்த ஊழியர்களை நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்கும் வேலை திட்டம் ஒன்றை பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பில் சகல மாகாண சபைகளுக்குமான பிரதம செயலாளர்களுக்கு மிக அவசரமாக மின்னஞ்சல் மூலம் உரிய நிறுவனங்களிடமிருந்து விபரங்களை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 15.06.2023 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் 180 நாட்களை பூர்த்தி செய்த சமயா சமய, அமைய , நாட் சம்பள, பதில் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றிய அனைத்து ஊழியர்களின் விபரங்களையும் 15.06.2023 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு முன் அமைச்சின் மின்னஞ்சல் முகவரி provincilsb@gmail.com ஊடாகவோ அல்லது 
011 23 28 28 2 என்ற தொலைநகல் ஊடாகவோ அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளது. 

இதனால் நாட்டில் உள்ள சகல அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் கடந்த 10 வருட காலமாக இவ்வாறு சேவையாற்றி வருகின்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் நன்மை அடைய உள்ளனர்.

குறித்த அமைச்சினால் கடந்த 15.06.2023 ஆம் திகதி இது தொடர்பில் கடிதம் மூலம் வெளியிடப்பட்டு அதே தினத்தில் பி.ப 3.00 மணிக்கு முன் தகவல்களை அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புதியது பழையவை