ஆரையம்பதியில் புலனாய்வு துறையினர் சுற்றிவளைப்பு


ஆரையம்பதியை சேர்ந்த நடராசா சுதாகர் என்பவரை கைது செய்வதற்காக  பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் அவரது வீட்டில் தேடுதல் மேற்கொண்டுள்ளனர் .நேற்றிரவு 9.00 மணியளவில் 2 வாகனங்களில் சென்றிருந்த பத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரே குறித்த நபரின் இல்லத்தை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் . 

நடராசா சுதாகர் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பை மீள் உருவாக்கம் செயற்பாட்டில் இடுபட்டார் எனும் தகவலின் அடிப்பையில் இந்த சுற்றிவளைப்பு தேடுதல் இடம்பெற்றது. தற்போது தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பை மீள் உருவாக்குகிறனர் என்ற போர்வையில் பல இளைஞர்களை கைது செய்கிற நடவடிக்கையினை புலனாய்வு துறையினர் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்க்கது.இத்தகைய தேடுதல் கைதுகளால் முன்னாள் போராளிகளும் பொதுமக்களும் பெரிதும் அச்சமடைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

புதியது பழையவை