வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி திருச்சடங்கானது கடந்த செவ்வாய்க்கிழமை(30 -05-2023) திருக்கதவு திறத்துடன் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(06-06-2023) அதிகாலை இடம்பெறும் திருக்குளிர்த்தி பாடுதலுடன் திருச்சடங்கானது இனிதே நிறைவுபெறவுள்ளது.
இவ்வருடாந்த திருச்சடங்கில் அம்மன் வீதிஉலா வருதல்,சிலம்பு அபிஷேகம்,அடியார்களின் நேர்த்திக்கடன் நிறைவேற்றல்,கன்னிக்கால் வெட்டுதல்,கண்ணகிக்கு கலியாணப்பூசை,வட்டுக்குத்துதல் பூசை,திருக்குளிர்த்தி சடங்குகள் என்பன துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய பிரதம பூசகர் கருணாகரன்-யமுனாகரன் தலைமையில் பூசைச்சடங்குகள் நிறைவுபெறவுள்ளது.
இவ்வுற்சவ காலங்களில் துறைநீலாவணை பொதுமக்களினால் பகல்,இரவுவேளைகளில் பூசைகள் நடைபெற்றும், அன்னதானம்,தாகசாந்தி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன் கன்னிக்கால் வெட்டும் சடங்கினை முன்னிட்டு துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக்கழகமும்,துறைநீலாவணை நியூ கல்யாணி ஜுவலரி உரிமையாளரும் இணைந்து மாபெரும் தாக சாந்தி நிகழ்வும் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.