இன்று பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!



இந்த ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (12-06-2023) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன.


பாடசாலைகளுக்கு கடந்த மே 26-ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நடவடிக்கைகளுக்காக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகும் வரையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்களை முதலாம் தரத்திற்குச் சேர்ப்பது தொடர்பான ஏற்பாடுகளும் இந்த அமைச்சரவை பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை