நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்!நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மேல் மாகாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதோடு சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசக்கூடும்
நாடு முழுவதும்அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் பலத்த காற்று ,மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
புதியது பழையவை