கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு புதிய வர்த்தமானிகலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவது தொடர்பில், 3 திருத்தச் சட்டமூலங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிநபர் யோசனைக்கு அமைவாக நேற்றையதினம் (27-06-2023) வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 3 திருத்தச் சட்டமூலங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பிரதேச சபைகள் திருத்தச் சட்டம், நகர சபைகள் கட்டளை திருத்தச் சட்டம், மாநகர சபைகள் திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களின் சரத்துகள் சில இந்த சட்டமூலத்தின் மூலம் திருத்தப்படவுள்ளன.

இதனிடையே, நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் தொடர்பான உத்தேச விதிமுறைகள் அடங்கிய புதிய சட்டமூலமொன்றும் வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் மீறப்படும் சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஒரு காலத்திற்கு திரும்ப அழைக்க அதிகாரம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை