கருணாவுக்கு எதிராக உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவில் முறைப்பாடு!


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காட்டில் 33 ஆண்டுகளுக்கு முன்னர் 600 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர் எனக்கூறப்படும் கிழக்கு மாகாணத்திற்கான விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதனுக்கு எதிராக அரசாங்கம் ஸ்தாபித்துள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவில் குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருணா அம்மானே பொலிஸாரை கொலை செய்ததாக இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த பேராசிரியர் மற்றும் சம்பவம் நடைபெற்ற போது திருகோவில் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றிய அதிரடிப்படை வீரர் ஜனித் சமில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி நடந்த இந்த கொலைகள் குறித்து இதுவரை எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அரசாங்கம் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்துள்ளதால், இந்த கொலைகளை மூடிமறைக்க முடியாது எனவும் திருகோவில் நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு பொலிஸார் மாத்திரமே உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை