தென் பசுபிக் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்!தென் பசுபிக் பெருங்கடலின் டோங்கா அருகே இன்று 7.2 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி அச்சுறுத்தல் இல்லை
நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா, அலாஸ்காவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புதியது பழையவை