மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 6 மாதங்களுக்கு மேலாக இனங்காணப்படாத மூன்று சடலங்கள்!மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் 6 மாதங்களுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ள 3 ஆண்களின் சடலங்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 ஆண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து நிலையில், சடலங்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலை பிரேத அறையில் அடையாளம் காண முடியத நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை!

இவர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை