ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுக் கூட்டம்!


ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்றைய தினம் (10-07-2023) கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையின் கட்சியின் மாவட்ட தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் வேந்தன், செயலாளர் ஐ.கதிர், கொள்கைப் பரப்புச் செயலாளர் சாந்தன், மாவட்ட இணைப்பாளர் சுதா மற்றும் தீபன், மகளிர் அணியினர் உள்ளிட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கட்சியின் கடந்த காலச் செயற்பாடுகள், ஜனநாயக ரீதியில் செயற்படும் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கட்சிக் கட்டமைப்பு விடயங்கள், எதிர்காலச் செயற்திட்டங்கள், போராளிகளுக்கான வாழ்வாதார ஊக்குவிப்புகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை கட்சி உறுப்பினர்களின் பல்வேறுபட்ட கருத்தாடல்களுக்கு தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களால் விளக்கங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை