கதிர்காம யாத்திரிகளுக்கு அன்னதானம் வழங்கிய விவகாரம்!மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கதிர்காம யாத்திரிகர்கள் செல்லும் வழியில் அன்னதானம் வழங்கும் விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் தெரிவித்த கருத்தானது ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்தாகும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மாநகரசபை ஊழியர்கள் அனைவரும் தொண்டு அடிப்படையிலேயே அன்னதானம் வழங்கும் பணியில் பங்குகொண்டார்களே தவிர எந்தவித களவும் அங்கு இடம்பெறவில்லையெனவும் அவர் தன்னைப்போல பிறரையும் நினைக்கின்றார்.


அண்மையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்கு கூட்டத்தில் மாவட்ட இணைத்தலைவர் மட்டக்களப்பு மாநகரசபையினால் நடாத்தப்பட்ட அன்னதான செயற்பாடுகள் தொடர்பாக சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.கதிர்காம பாதயாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்கான தீர்மானமானது 2022ஆம் ஆண்டு சபை மூலமாக எடுக்கப்பட்டது.அந்த தீர்மானத்தின் மூலம் நிதி வழங்குனர்களின் நீதிமூலமாகவும் மாநகரசபையின் வளங்களையும் பயன்படுத்தி அந்த அன்னதானத்தை செய்வது என தீர்மானித்து.

மாநகரசபையில் உள்வாங்கப்பட்ட யாப்பு நடைமுறை
அதன் அடிப்படையில் கதிர்காம பாதயாத்திரை செல்லும் நாவலடியென்னும் இடத்தில் 2022 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்குவதற்கு தீர்மானித்து அன்னதான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இந்த அன்னதான செயற்பாடு தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்ற நோக்குடன் நிதிகொடையாளர்கள் அனைவரையும் உள்வாங்கிய வகையிலான ஒரு அன்னதான சபை உருவாக்கப்பட்டது.


நிதி வழங்குனர்கள் ஒரு பங்குதாரர்களாகவும், வள பங்குதாரர்களாகவும் மாநகரசபையில் உள்வாங்கப்பட்டு யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டு சபை மூலமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.சுமார் 21கொடையாளர்கள் நிதி வழங்கியிருந்தனர்.

மாநகரசபையானது அன்னதானசபை கோரும் பட்சத்தில் மாநகரசபையின் வளங்களான ஆளணி,வாகன வசதிகளை வழங்க வேண்டும் என்று யாப்பு எழுதப்பட்டுள்ளது.அன்னதான நிதிவழங்குனர்களுக்கும் போக்குவரத்து ஒழுங்குகளை வழங்கவேண்டும் என்பதும் அந்த யாப்பில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை