நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் தலைவருமான மாதவ் குமார் இலங்கைக்கு விஜயம்!நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் தலைவருமான மாதவ் குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் இருக்கும் போது முன்னாள் பிரதமர் தெற்காசிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டத்திலும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை