சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில், வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இரு கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகிறது.
வடக்கு மாகாண கலந்துரையாடல் இன்றையதினம் காலை 9.00 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள எ.ஆர்.ஆர். வணிக வளாகத்தில் நடைபெறுகிறது.
அதேசமயம், கிழக்கு மாகாண கலந்துரையாடல் நாளையதினம் (09.07.2023) காலை 11.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மட்டகளப்பில் உள்ள east lagoon விடுதியில் இடம்பெறவுள்ளது.
மக்கள் சிந்தனை மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த கலந்துரையாடலில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், தவத்திரு. அகத்தியர் அடிகளார் (தென்கயிலை ஆதினம்) தவத்திரு வேலன் சுவாமிகள் (சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் - p2p மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்) பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் (யாழ் பல்கலைக்கழக அரசியல் துறை தலைவர்) பேராசிரியர். குணபாலன் (துறைத் தலைவர் பட்டப் பின்படிப்புக்கள், தென்கிழக்கு பல்கலைக்கழகம்) கலாநிதி வ.குணபாலசிங்கம் (கிழக்கு பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி) கலாநிதி.ந.புஸ்பராசா (சிரேஸ்ர அரசியல் துறை விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம்) திருமதி.புளோரிடா சிமியோன் (அரசியல் துறை விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.