தமிழ் அரசியல் கைதிகள் இருவர் - பொதுமன்னிப்பில் விடுதலை!நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சண்முகரட்ணம் சண்முகராஜன் மற்றும் செல்லையா நவரட்ணம் ஆகிய இருவருக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறி 200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த செல்லையா நவரட்ணம் மற்றும் வெடிப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சண்முகரட்ணம் சண்முகராஜன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை