குடிநீர் இணைப்பிற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளன



அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவி;ற்குட்பட்ட சாகாமம் மொட்டயாகலை அன்மித்த பிரதான வீதியில் குடிநீர் இணைப்பிற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 15 பாரிய குடிநீர் குழாய்கள் நேற்று (01-08-2023) தீயில் கருகி நாசமடைந்துள்ளன.


தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் குடிநீர் இணைப்பின் பொருட்டு ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு குறித்த பகுதிக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவ் ஒப்பந்தக்காரரால் சேமித்து வைக்கப்பட்ட குடிநீர் இணைப்பு குழாய்களே இவ்வாறு தீயில் கருகி நாசமடைந்துள்ளன.


குறித்த பிரதேசத்தில் அருகில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ள நிலையில் வீதியில் அருகில் இருந்த குடிநீர் குழாய்களும் தீயில் அகப்பட்டுள்ளன.

சம்பவத்தினை அறிந்து கொண்ட முன்னாள் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் நவனீதன் பிரதேச சபையின் குடிநீர் வவுசரை கொண்டு சென்று தீயை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.
புதியது பழையவை