மட்டக்களப்பில் மீண்டும் ஒரு மருத்துவக் கொலையா? அதிர்ச்சியில் மக்கள்மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பிள்ளைக்கு தாயான மட்டக்களப்பு கிரான்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய சின்னத்தம்பி சுபாஸ்ஜினி அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின் 14.08.2023 அன்று உயிரிழந்துள்ளார்.


தொடர்ந்து அவரது சிசுவும் உயிரிழந்துள்ளது. முறையாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மருத்துவ கிளினிக்கு சென்று வந்த தாயின் சிசுவின் மரணத்திற்கான காரணம் என்ன?

ஒரு வாரம் வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டிருந்த தாயை கவனிக்க நேரமில்லாத தனியார் வைத்தியசாலையில் பிசியானது தான் இந்த மரணத்திற்கான காரணமா? என்ற பதிவு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதியது பழையவை