யார் அசாத் மௌலானா என்பதில் பலருக்கு குழப்பம் நிலவுகின்றது



இந்தியா இராணுவத்தோடு  இயங்கிய   EPRLF அமைப்பை  குடும்ப பின்னணியாக கொண்ட அசாத் மௌலானா நீண்டகாலமாக EPDP  உறுப்பினராக டக்ளஸ் தேவானந்தவுடன் இயங்கி வந்தார் 

தினமுரசு ஆசிரியர் அற்புதனை வீழ்த்தி தினமுரசை  தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த  பின்னர் தினமுரசில்  டக்ளஸ் தேவானந்தா அசாத் மௌலானாவை  பணியாளராக சேர்த்து கொண்டார் 

டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசில் அரச மர முந்திரிகை கூட்டுத்தாபன  தலைவரின்  பணியாளர் குழுவிலும் அசாத் மௌலானா  பணியாற்றி இருந்தார் 

சம காலத்தில் 2004 ஆம்  ஆண்டு கருணா குழு இராணுவ உளவு சேவைக்கு  இணைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இராணுவ அதிகாரிகளே  கருணா குழுவின்  மொழிபெயர்பாளர்களாக இருந்தார்கள் 

இந்தியாவிலிருந்த  ENDLF, மட்டக்களப்பில் இயங்கிய புளொட், புளொட் மோகன் குழு , ராசிக் குழு  உட்பட பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பலரும் கருணா குழுவில் இணைக்கப்பட்டு துணைப்படையாக விரிவாக்கப்பட்டு இயங்க  தொடங்கி இருந்தது 

இந்த சூழ்நிலையில் கிழக்கு  மொழிநடை தெரிந்த  மொழிபெயர்ப்பாளரின்  அவசியம் உணரப்பட்ட புலனாய்வு துறையுடன் (MI) தொடர்பிலிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையுடன் அசாத் மௌலானா 2006 ஆம் ஆண்டு சித்திரை மாதம்  EPDP யிலிருந்து கருணா குழுவிற்கு இடம்மாற்றப்பட்டார் 

இதை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ஆனி மாதம் பாதுகாப்பு அமைச்சில் கோட்டாபாய  ராஜபக்சே மற்றும்  மேஜர்  ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோரை அசாத் மௌலானா கருணா குழுவுடன் முதன் முதலில் சந்தித்து இருக்கின்றார் 

ஆங்கிலத்தில் நடைபெற்ற மேற்படி 3 மணித்தியால கூட்டத்தில் கருணா குழுவை இராணுவ தேவைக்கு எப்படி பயனப்டுத்துவது என பேசப்பட்டதாக அசாத் மௌலானா தனது சாட்சியத்தில் பதிவு செய்து இருக்கின்றார் 
.
குறித்த சந்திப்புக்கு தொடர்ந்து கருணா குழு பேச்சாளராக BBC,Reuters போன்ற ஊடகங்களில் அசாத் மௌலானா பேச தொடங்கினார் 

இராணுவ புலனாய்வு பிரிவினர்  கருணா குழுவின் பெயரில் தொடங்கிய தமிழ் அலை  பத்திரிகைக்கு பொரளை விமான தள சூழலிலில்  அலுவலகம் உருவாக்கப்பட்டு அந்த அலுவலகம் கூட  அசாத் மௌலானா பொறுப்பில் விடப்பட்டது  

அதே காலத்தில் கருணா குழுவிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் MI பணிப்பாளர் பிரிகேடியர் அமல் கணசேனவுக்கும் பிள்ளையானுக்குமான தொடர்பாடல் மற்றும் நிதி கையாளுதல் பணிகளும் அசாத் மௌலானா வழங்கப்பட்டு இருந்தன 

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே  பிள்ளையான், அசாத் சாலே ஆகியோரின் உறவுகளும் வளர்ந்து பிள்ளையான் மற்றும் அசாத் மௌலானா ஆகியோர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே யின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் குறித்த காலத்திலேயே மாறினார்கள் 

இதையெல்லாம் மறைத்து விட்டு அசாத் மௌலானா தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் தனது  அலுவலக பணியில் சேர்ந்தார் என பிள்ளையான் பதட்டத்தில் பேசுவதில்  எந்தவித  உண்மையும் இல்லை
புதியது பழையவை