இன்றுடன் நிறைவுக்கு வரும் கால அவகாசம்!2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களுக்கு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (01.09.2023) நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் வாக்காளர் இடாப்பின் வரைவு கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை www.elections.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை