கிறிஸ்மஸ் நாளில் துப்பாக்கி சூடும் ! ஈஸ்டர் நாளில் குண்டுத் தாக்குதலும்


மட்டக்களப்பு மத்தியில் அமைந்துள்ள அனைத்து மக்களும் சென்று பிரார்த்தனை செய்யும் தேவாலயமே மாதா கோவில் என அழைக்கப்படும் புனித மரியாள் தேவாலயம்.

இத்தேவாலயத்திற்குள் பிரவேசிக்கின்ற போதெல்லாம் மனதில் ஓர் அமைதி ஏற்படுவதையும் மக்கள் ஆறுதல் பெறுவதையும் அனுபவித்தவர்கள் மட்டு வாழ் மக்கள்.

ஈவிரக்கமற்ற ஒருவர்

அவ்வாறான புனித தேவாலயத்திற்குள் துணிந்து சென்று தனது துப்பாக்கியினால் அதுவும் கிறிஸ்மஸ் இரவு அன்று மட்டக்களப்பு வாழ் மக்களையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈவிரக்கமற்ற ஒருவர், அதே பாணியில் கிறிஸ்தவர்களை ஈஸ்டர் தினத்தன்று இலக்கு வைத்து கொலையை செய்யப் பின்னணியில் இருந்துள்ளார் என்பது அவர்தான் இக்கொலைகளுக்கு காரணமானவர் என்பதில் துளியேனும் சந்தேகப்பட அவசியமில்லை.

தேவாலயத்திற்குள் சென்று துணிகரமாக கொலை செய்தவரையே அதே தேவாலயங்களுக்குள் மீண்டும் சென்று பல நூற்றுக்கணக்கான கொலைகளைச் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதில் சூத்திரதாரிகளுக்கு தமது வேலையை இலகுபடுத்தியுள்ளது.

2005 இல் ஜோசப் பரராஜசிங்கம்

வித்தியாசம் என்னவென்றால் அன்று ஓர் உயிர், இன்று குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர்! அன்று கிறிஸ்மஸ், இன்று ஈஸ்டர்.

2005 இல் ஜோசப் பரராஜசிங்கம்; 2019 இல் அப்பாவிக் கிறிஸ்தவர்கள்.

ஆக, இவ்வாறான பாதகமான கொலைகளைத் தேவாலயத்திற்குள் செய்ய ஒருவனை தெரிவு செய்வதானால் அல்லது துணிகிறானென்றால்,  அது அவனால் மட்டுமே முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் புரிகிறதல்லவா?

2005 ஒத்திகை; 2019 அரங்கேற்றம் அவ்வளவுதான். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!!
புதியது பழையவை