அரச வாகனத்தில் சென்று மதுபானம் கொள்வனவு - மக்கள் விசனம்!முல்லைத்தீவு அரச திணைக்களமொன்றின் வாகனத்தில் நேற்று (22- 09-2023) மாலை 6:20 மணியளவில் மல்லாவி பகுதியில் அமைந்திருக்கின்ற மதுபான சாலையில் வாகனத்தை நிறுத்தி மதுபானங்கள் வாங்கிச் சென்றதாக கூறப்படுகின்றது.

ஒரு அரச திணைக்களத்திற்குரிய வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


கண்டுகொள்ளாத  பொலிஸார்
இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் சிலர், மல்லாவி பொலிஸாரிடம் சென்று முறையிட்டபோதும், தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிசார் மறுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.


அதேசமயம் வாகனம் அவ்விடத்தில் நிற்பதனை ஒளிப்பதிவு செய்வதனை கண்டு அவர்கள் உடனடியாக அவ் இடத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

எனினும் சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்து மதுபானங்களை பெற்றுசென்றதாக பிரதேசமக்கள் கூறுகின்றனர்.
புதியது பழையவை