காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட சாட்சியங்கள்


காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட சாட்சியங்களிலிருந்து மூன்று வெள்ளை வான்கள் அடையாளம் காணப்பட்டு இருந்தது...

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரும் டக்லஸ் தேவானந்தா தரப்பினரும் பொதுமக்களை கடத்த பயன்படுத்திய 252-3286 என்ற இலக்க வெள்ளைவான் ஒன்றை திருமதி இராசேந்திரம் துளசிமலர் என்பவர் அடையாளம் காட்டி இருந்தார்...

அதே போன்று மட்டக்களப்பில் இராணுவத்தினரும் பிள்ளையான் குழுவினரும் பொதுமக்களை கடத்த பயன்படுத்திய 58-6974 இலக்க வெள்ளைவான் ஒன்றை சின்ன ஊறணியை சேர்ந்த தாய் ஒருவர் அடையாளம் காட்டி இருந்தார்...

அம்பாறையில் இராணுவத்தினரும் கருணா-இனியபாரதி கும்பல்கள் அப்பாவி மக்களை கடத்த பயன்படுத்திய இலக்க தகடற்ற வெள்ளை வான் ஒன்றை திரு உவிந்து குருகுலசூரிய என்கிற பத்திரிகையாளர் படங்களுடன் அடையாளம் காட்டி இருந்தார்...

இவ்வாறு அடையாளம் காட்டப்பட்டுள்ள மேற்படி வெள்ளை வாகனங்களின் பதிவுகளை , உரிமையாளர்களை அடையாளம் காண்கின்ற போது வடக்கு கிழக்கில் கடத்தப்பட்ட பலருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியும்....

ஆனால் ஆட்சியாளர்கள் அதற்கு தயாரில்லை...

பிள்ளையான் , டக்ளஸ் தேவனானந்தா போன்றவர்களை கூட விசாரணை வலயத்திற்குள் கொண்டு வரமால் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு மரண சான்றிதழைகளை கொடுத்து நெருக்கடிகளை தளர்வடைய முயற்சிக்கின்றார்கள்...

சம நேரத்தில் காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை உருவாக்கி   கோட்டாபய ராஜபக்சே, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே,   மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண போன்ற மேற்படி பலவந்த கடத்தல் தொடர்பான உயர் மட்ட சூத்திரதாரிகளை பாதுகாத்து வருகின்றார்கள்... 

திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களோடு பேசி வரும் தமிழ் தலைவர்கள் இந்த விடயத்தை உறுதியாக கையில் எடுக்க வேண்டும்...

தங்களுக்கு தீர்வு தேடி 2,000 இற்கு மேற்பட்ட நாட்களாக வீதியில் நிற்கும் அப்பாவி உறவுகளுக்கு தீர்வு தராமல் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களோடு பேசி கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை....

குற்றவாளிகளுக்கு தண்டனை அழியுங்கள்.....
திறமையானவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்....
நாடு முன்னேறும்.....

புதியது பழையவை