மட்டக்களப்பு மாவட்ட முழுநேர தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்i


பொத்துவில் இருந்த நல்லூர் நோக்கி சென்ற தீயாகதீபம் திலீபனின் ஊர்தி மிது நடாத்தப்பட்ட தாக்குதல் சிறுபாண்மை தமிழ் இனத்தை நசுக்கும் செயற்பாடு மட்டக்களப்பு மாவட்ட முழுநேர தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்i

பொத்துவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற  தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனிமீது குறிப்பிட்ட பெரும்பாண்மை இன காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை  மட்டக்களப்பு மாவட்ட முழுநேர தொழில்சார்  ஊடகவியலாளர் சங்கம் மிகவும் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

“சாதரண அகிம்சை ரீதியான நினைவேந்தலைக்கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதியும், அரசாங்கமும் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்டமிட்ட  தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனையினையும் வழங்க வேண்டும் என்று  மட்டக்களப்பு மாவட்ட முழுநேர தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம் வலியுருத்தியுள்ளது.

இலங்கையில் இனங்களுக்கு இடையில் இனமுறுகளுக்கு இடமழிக்காது அனைவரையும் பாராபட்டசம் பாராமல் சம உரிமையுடன் வாழ வளி வகுப்பதோடு  இதற்கான சரியான விசாரணையை  நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு
ஜனநாயக ரீதியில் போராட அனைத்து இலங்கையர்களுக்கும் உரிமை உண்டு என்பதை கருத்தில் கொண்டு பாதிக்கபட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் 

குறித்த இடத்தில் ஒரு ஊடகவியிலாளருக்கும் பெரும்பாண்மை இனத்தவ பெண் ஒருவரினால் அச்சுறுத்தல் விடுக்கப்ட்ட சம்பவம் நிகழ்ந்ததுள்ளது அதையும் வண்மையாக கண்டிக்கிறோம்
நன்றி.

 மட்டக்களப்பு மாவட்ட முழுநேர தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம்
புதியது பழையவை