10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைநாடளாவிய ரீதியில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

அந்த வகையில் மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலம், மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, ரத்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளுக்கு இன்று முதல் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேசத்திற்கு இன்று முதல் நிலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின் பாததும்பர பிரதேசத்தில் இன்று முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
புதியது பழையவை