மான் கறி தயாரித்த 17 வயது சிறுமி கைது!



விலானகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அலவத்துகொட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மான் கறி தயாரித்துக்கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


விலானகம பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மான் ஒன்று கொல்லப்பட்டுள்ளதாகவும், குறித்த வீட்டில் மான் கறி மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் பேரில் பொலிஸார் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபர் கண்டி நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 20ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர், நீதிவான் நீதி மன்றத்தில் மான் கறியை அழிக்க உத்தரவிடப்பட்டது.
புதியது பழையவை