தவறான கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக - கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு!


சிங்களவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கையெடுக்கப்படுவதாக தவறான கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்

கடந்த இரண்டு மூன்று நாட்களாக சில பிக்குமார் இந்த நாட்டின் ஜனாதிபதியையும், என்னையும் குறைகூறி ஊடக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். அது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

இந்த நாட்டில் அரசாங்கத்தின் இடத்தை அது சிங்கள மக்களாக இருக்கட்டும், தமிழ் மக்களாக இருக்கட்டும், கிருஸ்தவ மக்களாக இருக்கட்டும் அல்லது முஸ்லிம் மக்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் அரச இடத்தை கைப்பற்றவோ சட்டவிரோதமாக பிடிக்க முயற்சித்தாலும் கண்டிப்பாக அவர்கள் மீது ஒரே விதமாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஆனால் தற்போது பிரச்சாரம் செய்கிறார்கள், நாங்கள் சிங்களவர்கள் எங்களை எங்களுடைய இடத்திலிருந்து வெளியே போகச் சொல்கிறார்கள் என்று.

அது முற்றிலும் தவறான விடயம். தனியார் இடங்களாக இருந்தால் கண்டிப்பாக அரசாங்கம் அதில் தலையிடப் போவதில்லை.
எனினும் அரசாங்க இடத்திற்குள் யார் நுழைந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மதங்களை காட்டி இதனை பிரச்சினைப்படுத்துகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் இது நாகரீகமான செயல் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை