இலங்கையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு ஆண் குழந்தைகள்கொழும்பு - காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில்  பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

ராகமைப் பகுதியைச் சேரந்த பெண் ஒருவரே இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். 

இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். 


எனினும், இந்த ஆறு குழந்தைகளுக்கும் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக குறித்த  வைத்தியசாலையில் குழந்தை பிரிவுக்கு பொறுப்பான சிறப்பு வைத்தியர்  சமன்குமார குறிப்பிட்டுள்ளார். 

இந்த குழந்தைகளுள், ஐவர் தற்போது காசல் வைத்தியசாலையிலும் ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தைகள் அறுவரும் 400 தொடக்கம் 700 கிராம் எடையில் பிறந்துள்ளனர் என்றும், அவர்களுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து பராமரிப்பது வைத்தியர்களுக்கு சவாலான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதியது பழையவை