வீதியில் கண்டெடுத்த தங்க மாலை மோதிரம் -அதனை உரியவரிடமே ஒப்படைத்த சம்பவம்



தங்க மாலை ஒன்றினையும் மோதிரம் ஒன்றினையும் கண்டெடுத்த நபர் ஒருவர் அதனை உரியவரிடமே ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அம்பாறை - அக்கரைப்பற்று பஸ் நிலையத்தின் அருகாமையில் நடந்த சென்ற கோயில் வீதி திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த அன்ரி மலேரியா ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் கணபதிப்பிள்ளை கார்த்திகேசு என்பவர் தங்க மாலை ஒன்றினையும் மோதிரம் ஒன்றினையும் கண்டெடுத்துள்ளார்.

நேர்மையான செயல்
இதன்போது, அருகில் இருந்த இன்னுமொருவர் அது தன்னுடையது என கூறி பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார். எனினும் அதனை உரியவரிடமே ஒப்படைக்க வேண்டும் என கார்த்திகேசு கூறியுள்ளார்.


அதனை ஏற்காம குறித்த நபர் அந்த மாலையினை தனது என பெற்றுக்கொண்ட நிலையில் மாலை மற்றும் மோதிரத்தை கண்டெடுத்த கார்த்திகேசு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் விடயத்தினை தெரிவித்துள்ளார்.


இதனை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் நகையினை மீட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்து கண்டெடுத்தவர் மூலமாக பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் அவரது நேர்மையான செயலுக்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.பி.விஜயதுங்கவின் ஆலோசனைக்கு அமைவாக பெருங்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசிப் தலைமையிலான பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
புதியது பழையவை