மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சொந்தமான வயலில் நெல் விதைப்புமட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சொந்தமான, திருப்பெருந்துறை திறந்தவெளி பண்ணை வயலில் நெல் விதைப்பு
இன்று இடம்பெற்றது.

விசேட பூஜை வழிபாடுகளுடன் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில், சுப வேளையில் நெல் விதைப்பு ஆரம்பித்து வைக்கப்படடது.

மூன்று தசாப்த காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த திருப்பெருந்துறையில் உள்ள 23 ஏக்கர் நிலப்பரப்பில், 10 ஏக்கர் பண்படுத்தப்பட்டு, விதைப்பு இடம்பெற்றது.

நஞ்சற்ற வேளாண்மை உற்பத்தி செயற்பாட்டின் கீழ் விளைச்சல்களை சிறைச்சாலையில் இருக்கும் சிறைக்கைதிகளின் உணவிற்காக பயன்படுத்துவதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.
புதியது பழையவை