தலைவரின் இருப்பு தொடர்பில் வெளியான தகவல் - வைகோபிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் பிரபாகரன் திரும்பி வருவார் என்றும் அந்த நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்றும் மதிமுக செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அதில் கலந்து கொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் பிரபாகரன்
மேற்படி விடயம் குறித்து மேலும் அவர் கருத்துரைக்கையில்,


இலங்கை தமிழர்களுக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனும் எண்ணத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

பழ நெடுமாறன் ஆகியோர் விடுதலை புலிகளுடன் பல ஆண்டுகளாக இருந்தவர்கள் அவர்கள் யாரும் பொய் சொல்ல வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது.


பிரபாகரன் திரும்பி வருவார் எனும் நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம். அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதே எங்களது கருத்து. என்றார்
புதியது பழையவை