இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சோபியா வில்கின்சனினால் மட்டக்களப்பில் குழந்தைகள் பராமரிப்பு நிலையம்
திறந்து வைக்கப்பட்டது.
சென் மேரிஸ் மோன்டேசரி ஹவுஸ் குழந்தைகள் பராமரிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரஜினி பிரான்சிஸ் தலைமையில், திறப்பு விழா
நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில், சர்வோதயா நிருவனத்தின் தலைவர் வின்யா ஆரியரத்ன, கொமர்சல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் சனத் மானதுங்க, சர்வதேச நிதி நிறுவனத்தின்
இலங்கை நாட்டுக்கான முகாமையாளர் அலிஜன்ரொ, நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் நிமாலி எஸ் குமாரி உட்பட பலரும் பங்கேற்றனர்.
அவுஸ்ரேலிய அரசாங்கம், சர்வதேச நிதி நிறுவனம், சர்வோதயா ஆகிய நிறுவனங்களுடன் கொமர்சல் வங்கி ஆகியவற்றின் நிதி அனுசரணையில்
சிறுவர் பராமரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் தொடர்பாடலை விருத்தி செய்வதன் மூலம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தி, ஆரோக்கியமான பிரஜைகளாக அவர்களை உருவாக்க
முடியுமென நிகழ்வில் உரையாற்றும்போது, அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.