மட்டக்களப்பில் முற்றாக எரிந்து நாசமாகிய பேருந்துமட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் தனியார் பேருந்தொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (09 -11-2023) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


தீ விபத்திற்கான காரணம்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதிக்கருகில் உள்ள வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரனைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை