பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட கல்வி அமைச்சர் - சுசில் பிரேமஜயந்த



அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீதச் சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரச அச்சக கூட்டுத்தாபனம் நூற்றி இருபத்தைந்து கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாகவும், தேவையான அளவு புத்தக அச்சிடுவதற்கு கூட்டுத்தாபனம் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது தாள்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
புதியது பழையவை