கடையாகும் நடைபாதை கவனிக்குமா நகரசபை?

திருகோணமலை நகரசபைக்கு உட்பட்ட வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் போடப்பட்டுள்ள நடைபாதைக் கடைகளை நீண்டகாலமாக காண முடிகின்றது. சில இடங்களில் சில கடைகள் நிரந்தரமாக மாற்றப்பட்டுவருகின்ற நிலையில் எதிர்காலத்தில் இது சவாலான நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

இதன்மூலம் நகரசபையின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இது திருகோணமலையின் அபிவிருத்தியிலும் தாக்கத்தைச் செலுத்தும். நகரசபையால் வியாபாரத்திற்காக கடைத் தொகுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் அதிகமானவை வெறுமையாகவே காணப்படுகின்றன. 

இவற்றைப் பயன்படுத்துகின்றவர்கள் நகரசபைக்கு கட்டணம் செலுத்தி வியாபாரம் செய்யும்போது கட்டணம் செலுத்தாமல் வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பையும் நகரசபை வழங்குமானால் இது நகரசபைக்கு வரி செலுத்துகின்றவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.

எனினும் வீதியோரங்களில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற உள்ளுர் உற்பத்தி சிறு வியாபாரிகளுக்கு விசேட சலுகைகள் வழங்குவதன் மூலம் அவர்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். 

நகரசபை செயலாளரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் திருகோணமலை நகரத்தை மேலும் வளப்படுத்த முடியும்.
புதியது பழையவை