அம்பாறை கஞ்சிகுடியாறு - மாவீரர் துயிலுமில்லத்தில் குழப்பத்தை ஏற்படு்த்திய காவல்துறையினர்வடக்கு கிழக்கில் பல பிரதேசங்களில் மாவீரர் துயிலுமில்லங்களில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்திற்குள் அஞ்சலி செலுத்த வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினர் மற்றும் மக்களை உள்நுழைய விடாமல் காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.


இதன்போது, குறித்த இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காவலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருந்தும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கை
அத்தோடு, அஞ்சலி செலுத்த வரும் மக்களின் அடையாள அட்டைகள் போன்றவற்றை சோதனை செய்துள்ளனர்.
புதியது பழையவை